January 14 , 2021
1321 days
777
- சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் நிறுவனமானது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளது.
- வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் சமீபத்தில் அமெரிக்காவை தனது நாட்டின் "மிகப்பெரிய எதிரி" என்று குறிப்பிட்டுள்ளார்.
- தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஹிமா கோலி என்ற நீதிபதி பதவியேற்றுள்ளார்.
- ஆடை வடிவமைப்பாளரான சத்யா பால் தனது 79 வயதில் காலமானார்.
- அவர் இந்தியாவில் L’Affaire என்ற சேலைக் கடையின் முதல் பிரிவைத் தொடங்கினார்.
- பஞ்சாப் மாநிலமானது ஜனவரி மாதத்தை 'தீயன் டி லோஹ்ரி' என்ற திட்டமாக பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கிறது.
- லோஹ்ரி என்பது ஆண்டுதோறும் ஜனவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படும் வட இந்தியாவின் அறுவடைத் திருவிழாவாகும்.
Post Views:
777