TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 18 , 2021 1317 days 509 0
  • இராணுவத் தளபதியான அபிலாஷ் டாமி அவர்கள் இந்தியக் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.
    • உலகையே தனியாகவும் மற்றும் பாய்மரப் படகில் உதவி எதுவுமின்றியும் சுற்றி வந்த முதலாவது இந்தியர் இவராவார்.
  • சமீபத்தில் மத்திய அமைச்சரவையானது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான இந்திய-ஐக்கிய அரபு அமீரகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • சமீபத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது புதிய அயல்நாட்டு வர்த்தகக் கொள்கை 2021-26 என்ற கொள்கையை அறிவித்துள்ளது.
    • இது இந்தியாவை 2024 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதார நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ”கிழக்கு நோக்கியப் பார்வை : சீனாவில் புத்தத் துறவிகள் மற்றும் புரட்சியாளர்கள்” என்பது ரொமிலா தாபர் அவர்களால் எழுதப்பட்ட ஒரு புதிய புத்தகமாகும்.
  • இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான எஸ் ஒய் குரேஷி அவர்கள் ”மக்கள்தொகை பற்றிய புதிர் : இந்தியாவில் இஸ்லாம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான அரசியல்” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • செர்ரி மலர்த் திருவிழாவின் 4வது பதிப்பானது மணிப்பூரில் உள்ள மாலோவில் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கப் பட்டது.
    • மணிப்பூர் மாநிலமானது இந்தத் திருவிழாவை 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்