TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 21 , 2021 1314 days 646 0
  • இந்தியாவின் முதலாவது வாக்காளரான ஷியாம் சரண் நேகி (103) அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் கின்னாவுர் மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் வாக்களித்தார்.
    • 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் வாக்காளர் என நம்பப்படும் இவர் 1917 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று பிறந்தார்.
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் ”நிஷாங்க்” அவர்களுக்கு, அவர் ஆற்றிய இலக்கியப் பணிக்காக வேண்டி கனடாவின் இந்தி எழுத்தாளர்கள் சங்கத்தினால் ”சாகித்ய கவுரவ் சம்மன்என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • கோவாவில் நடத்தப் பட்ட இந்திய சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின் 51வது பதிப்பானது பிஸ்வாஜித் சட்டர்ஜி என்பவருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை என்ற பட்டத்தை வழங்கி உள்ளது.
    • இவர் ஒரு முதுபெரும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இந்தி மொழிப் பாடகர் மற்றும் வங்காள சினிமா துறையைச் சார்ந்தவர் ஆவார்.
  • கர்நாடக கால்நடைகள் வதைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அவசரச் சட்டம், 2020 என்ற சட்டமானது ஜனவரி 18 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
    • இந்த அவசரச் சட்டமானது மாடுகள், காளைகள், அனைத்து வயதிலும் உள்ள எருதுகள் மற்றும் 13 வயதிற்கும் குறைவான ஆண் அல்லது பெண் எருமைகளைக் கொல்வதைத் தடை செய்கின்றது.
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றமானது பிஜி நாட்டினை 2021 ஆம் ஆண்டின் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்