TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 13 , 2021 1291 days 656 0
  • இந்திய இராணுவமானது ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் மிக உயர்ந்த “தேசியக் கொடி சின்னத்திற்கு” அடிக்கல் நாட்டியது.
    • இந்தக் கொடியானது 100 மீட்டர் உயரமுடைய ஒரு கம்பத்தின் மேல் ஏற்றப்படள்ளது.
  • “பல்வேறு மகிழ்ச்சியான விபத்துகள் : வாழ்க்கையின் நினைவு கூர்தல்கள்” என்ற தலைப்பு கொண்ட ஒரு புத்தகமானது இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத்  தலைவரான எம் ஹமீது அன்சாரி அவர்களால் எழுதப் பட்டு வெளியிடப் பட்டது.
  • ஒடிசா  மாநில அரசானது அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்.எஸ் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்திடச்  செய்வதற்கான தனது கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல மத்திய அரசை நாட முடிவு எடுத்து இருக்கின்றது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரான அண்ட்டோனியோ குட்டேரஸ் அவர்கள் மைக்கேல் ப்ளூம்பெர்க் என்பவரை தனது காலநிலை நோக்கங்கள் மற்றும் தீர்வுகள் என்பது குறித்த சிறப்புத் தூதராக மீண்டும் நியமித்துள்ளார்.
  • அமெரிக்காவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் இணைவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
    • அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இந்த உலகளாவிய அமைப்பிலிருந்து விலகிமூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கர்நாடகா மாநில அரசானது விஜயநகரத்தை அம்மாநிலத்தின் 31வது மாவட்டமாக அறிவித்துள்ளது.
  • இந்தியப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது வேகப் பந்து வீச்சாளர் மற்றும் ஆறாவது இந்தியப் பந்து வீச்சாளராக  உருவெடுத்துள்ளார்.
  • மத்திய அரசானது “10,000 வேளாண் உற்பத்தி அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு” என்ற ஒரு புதிய மத்தியத் துறைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்