TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 14 , 2021 1290 days 554 0
  • புதிய இராணுவத் தலைமையிலான அரசாங்கத்தை அங்கீகரிக்காததால் மியான்மருடனான தனது அனைத்து ராஜதந்திர உறவுகளையும் நியூசிலாந்து நாடானது அதிகாரப் பூர்வமாக நிறுத்தியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 12, அன்று சீனாவானது சந்திரப் புத்தாண்டைக் கொண்டாடச் செய்தது.
    • இது எருது ஆண்டினுள் (Year of the Ox) நுழைந்துள்ளது.
  • தடகள வீரரான ஹிமா தாஸ் அவர்கள் அஸ்ஸாம் அரசால் துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய தேசியக் கொடுப்பனவு நிறுவனமானது ‘NPCI PayAuth Challenge’ என்ற ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
  • அமெரிக்க அதிபர் மியான்மரில் உள்ள இராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து உள்ளார்.
    • அமெரிக்க அரசாங்கமானது முதல் சுற்று பொருளாதாரத் தடைகளை அடையாளம் கண்டு, அதன் பிறகு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்