தமிழ்நாடு முதலமைச்சர், மாநிலத் திட்ட ஆணையத்தின் (SPC) 6வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தின் போது, முதல்வர் மூன்று அறிக்கைகளை வெளியிட்டார்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் தாக்கம்,
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் தேர்வுகள் குறித்த ஆய்வு.
சென்னை மற்றும் அண்டைப் பகுதிகளில் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த அறிக்கை.
உதயநிதி ஸ்டாலின் SPC ஆணையத்தின் அலுவல்சார் துணைத் தலைவராவார்.
அதன் நிர்வாக துணைத் தலைவர் J. ஜெயரஞ்சன் ஆவார்.
SPC ஆணையத்தின் இதர மற்ற உறுப்பினர்கள் ரமா. சீனிவாசன், சுல்தான் அகமது இஸ்மாயில், K. தீனபந்து, N. எழிலன், மல்லிகா சீனிவாசன், J. அமலோற்பவநாதன், G. சிவராமன் மற்றும் நர்த்தகி நடராஜ் ஆகியோராவர்.