TNPSC Thervupettagam
February 25 , 2025 7 days 39 0
  • அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் குழுவானது, பூமியை விட மிகப் பெரியதாகவும், சனியை விட மிகவும் சிறியதாகவும் இருக்கும் ஒரு பெரிய கிரகத்தைக் கண்டறிந்துள்ளது.
  • TOI-6038A b என அழைக்கப்படும் இந்தக் கோளானது, சுமார் 78.5 புவி நிறைகள் மற்றும் மாபெரும் இரட்டை வானியல் அமைப்பில் 6.41 புவி ஆரங்கள் கொண்ட அடர்த்தியான சனி கோளினை ஒத்த கிரக அளவைக் கொண்டுள்ளது.
  • TOI-6038A ஆனது, TOI-6038B எனப்படும் K-வகை துணை நட்சத்திரத்துடன் கூடிய ஓர் இரட்டை வானியல் அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது.
  • இந்தக் கோள் ஆனது ஒரு மிகப் பிரகாசமான, உலோகக் கூறுகள் நிறைந்த F-வகை நட்சத்திரத்தினை 5.83 நாட்களுக்கு ஒருமுறை ஒரு வட்ட வடிவ சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.
  • ஒரு F-வகை நட்சத்திரம் என்பது நமது சூரியனை விட வெப்பமாகவும் பிரகாசமாகவும் இருக்கும் ஒரு வகை நட்சத்திரமாகும், ஆனால் அது பேரண்டத்தில் உள்ள வெப்பமான நட்சத்திரங்களைப் போல அதிக வெப்பமானது அல்ல.
  • இது நட்சத்திர வகைப்பாடு அமைப்பில் உள்ள A-வகை (வெப்பமானது) மற்றும் G-வகை (நமது சூரியனைப் போல) இடைப்பட்ட வகைப்பாட்டில் வருகிறது.
  • PARAS-1 மற்றும் PARAS-2 நிறமாலை வரைபடங்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகளால் இந்த ஐந்தாவது புறக்கோள் கண்டுபிடிப்பு ஆனது மேற்கொள்ளப்பட்டது.
  • வானியல் கருவிகள் அமைப்பு நுட்பத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் முன்னேற்றம் ஆனது PARAS-2 மூலம் சிறப்பிக்கப்படுகிறது.
  • PARAS-2 என்பது ஆசியாவிலேயே மிகவும் துல்லியமான நிலைப்படுத்தப்பட்ட ஒரு ஆரத் திசை வேக (RV) அலைமானியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்