நாசா நிறுவனமானது, 'சூப்பர் எர்த்' (புவியினை போன்ற அமைப்புகளைக் கொண்ட பெரிய கோள்) உயிர்கள் வாழ்வதற்கு உகந்த சூழல்களைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு கிரகத்தைக் கண்டறிந்துள்ளது.
TOI-715 b என்று அழைக்கப்படும் இந்த கிரகம் ஆனது நமது புவியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்பதோடு இது பூமியை விட ஒன்றரை மடங்கு அகலமும் கொண்டதாகும்.
இது பழமையான வாழ்விட மண்டலத்தில் உள்ள அதன் தோற்ற நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
TOI-715 b என்ற கிரகத்தின் தோற்ற நட்சத்திரம் ஆனது சூரியனை விட சிறிய மற்றும் குளிர்ச்சியான ஒரு சிவப்பு நிறக் குறு விண்மீன் ஆகும்.