12வது அறிக்கையானது 2022 ஆம் ஆண்டு முழுவதும் 56 நாடுகளில் உள்ள 389 நகரங்களில் நிலவியப் போக்குவரத்துப் போக்குகள் குறித்து மதிப்பிட்டது.
2022 ஆம் ஆண்டில் உலகிலேயே மிக மெதுவாக வாகனம் ஓட்டக் கூடிய இரண்டாவது இடம் பெங்களூரு நகராகும்.
இந்தப் பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது.
இந்த மதிப்பீட்டானது வாகனம் ஓட்டும் போது ஏற்படும் நேர இழப்பினை மட்டும் மதிப்பிடாமல், பணம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிற காரணிகளின் மீதான தாக்கங்களையும் மதிப்பிடுகிறது.
பெங்களூருவின் பரபரப்பான போக்குவரத்தானது கடந்த ஆண்டில் 129 மணி நேர இழப்புக்கு வழி வகுத்தது.
அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக 140 மணி நேர இழப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் நேரங்களின் போதான வாகன இயக்கத்தின் போது ஒரு மைலுக்கு வெளியிடப்படும் CO2 உமிழ்வுகளின் அடிப்படையில் பெங்களூரு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
வாகன இயக்கத்தின் போது ஒரு மைலுக்கு வெளியிடப்படும் CO2 உமிழ்வுகளின் அடிப்படையில் இலண்டன் அதிகளவு CO2 உமிழ்வினை வெளியிடுகிறது.