TNPSC Thervupettagam

TomTom போக்குவரத்துக் குறியீடு அறிக்கை

February 19 , 2023 673 days 344 0
  • 12வது அறிக்கையானது 2022 ஆம் ஆண்டு முழுவதும் 56 நாடுகளில் உள்ள 389 நகரங்களில் நிலவியப் போக்குவரத்துப் போக்குகள் குறித்து மதிப்பிட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் உலகிலேயே மிக மெதுவாக வாகனம் ஓட்டக் கூடிய இரண்டாவது இடம் பெங்களூரு நகராகும்.
  • இந்தப் பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது.
  • இந்த மதிப்பீட்டானது வாகனம் ஓட்டும் போது ஏற்படும் நேர இழப்பினை மட்டும் மதிப்பிடாமல், பணம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிற காரணிகளின் மீதான தாக்கங்களையும் மதிப்பிடுகிறது.
  • பெங்களூருவின் பரபரப்பான போக்குவரத்தானது கடந்த ஆண்டில் 129 மணி நேர இழப்புக்கு வழி வகுத்தது.
  • அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக 140 மணி நேர இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • போக்குவரத்து நெரிசல் நேரங்களின் போதான வாகன இயக்கத்தின் போது ஒரு மைலுக்கு வெளியிடப்படும் CO2 உமிழ்வுகளின் அடிப்படையில் பெங்களூரு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • வாகன இயக்கத்தின் போது ஒரு மைலுக்கு வெளியிடப்படும் CO2 உமிழ்வுகளின் அடிப்படையில் இலண்டன் அதிகளவு CO2 உமிழ்வினை வெளியிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்