TOONZ அனிமேஷன் வல்லுநர்கள் மாநாடு – 2018-ன் 19-வது பதிப்பு கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இம்மாநாடு அனிமேஷன், காட்சி விளைவுகள் (Visual Effects), கேமிங் (Gaming) மற்றும் நகைச்சுவை மன்றம் (Comics Forum) ஆகியவற்றிற்கான பிக்கி (FICCI) அமைப்பின் தலைவரான ஆஷிஷ் குல்கர்னியால் தொடங்கி வைக்கப்பட்டது. இம்மாநாடு தொழில்நுட்பப் பூங்காவான (Technopark-based) TOONZ ஊடகக் குழுவால் நடத்தப்பட்டது.
இந்திய அனிமேஷன் துறையின் முன்னோடியும், அனிமேஷனில் ஹனுமானை உருவாக்கியவருமான திரு. V.G. சமந்த் அவர்கள் அனிமேஷன் துறையில் தன்னுடைய பங்களிப்பிற்காக அனிமேஷனின் பிரபலமானவர் (Legend of Animation) என்ற விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.