சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோவில் 11 பசுபிக் கரை நாடுகள் CP TPP or TPP11 என்றழைக்கப்படும் டிரான்ஸ் பசிபிக் கூட்டுப் பங்களிப்பிற்கான விரிவான மற்றும் வளர்ச்சி ஒப்பந்தத்தில் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership – CP TPP) முறையாக நுழைந்துள்ளன.
அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட டிரான்ஸ் பசிபிக்கூட்டுப் பங்களிப்பின் திருத்தப்பட்டப் பதிப்பே (revised version) இந்த CP TPP ஆகும். TPP யிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு இது இறுதி செய்யப்பட்டது.
TPP 11-ல் ஆஸ்திரேலியா, புருனே, கனடா, சிலி, மலேசியா, ஜப்பான், மெக்ஸிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய 11 நாடுகள் உள்ளன.
வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (NAFTA - North American Free Trade Agreement) மற்றும் ஐரோப்பிய யூனியன் (European Union-EU) ஆகியவற்றைத் தொடர்ந்து உலகின் மூன்றாவது பெரிய வர்த்தக மண்டலம் (Trade Bloc) இதுவாகும்.
இந்த 11 நாடுகளுள் 6 நாடுகள் தங்களுடைய உள்நாட்டளவில் இந்த ஒப்பந்தத்தினை உறுதி செய்த (Ratify) 60 நாட்கள் கழித்து இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்.
மருந்துப் பொருட்களுடைய அறிவுசார் சொத்துரிமையின் பாதுகாப்பைப் பெருக்குவதற்கான விதிகள் உட்பட TPP உடன்படிக்கையில் அமெரிக்கா வேண்டிய சில தேவைகள் இப்புதிய ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டுள்ளன.
12 உறுப்பு நாடுகளைக் கொண்ட TPP-யிலிருந்து 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா வெளியேறியது.
அமெரிக்கா TPP-யிலிருந்து வெளியேறிய பிறகு, அதனைக் குறித்து கருதாது TPPயை முன்னெடுத்துச் செல்ல பிற 11 நாடுகள் முடிவு செய்தன. இத்தகு வகையில் இந்த ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி செய்யப்பட்டது.