TNPSC Thervupettagam

TPP-க்கான விரிவான மற்றும் வளர்ச்சி ஒப்பந்தம்

March 15 , 2018 2319 days 737 0
  • சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோவில் 11 பசுபிக் கரை நாடுகள் CP TPP or TPP11  என்றழைக்கப்படும் டிரான்ஸ் பசிபிக் கூட்டுப் பங்களிப்பிற்கான    விரிவான மற்றும் வளர்ச்சி ஒப்பந்தத்தில்   (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership – CP TPP)  முறையாக நுழைந்துள்ளன.
  • அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட டிரான்ஸ் பசிபிக்கூட்டுப் பங்களிப்பின்    திருத்தப்பட்டப் பதிப்பே (revised version) இந்த CP TPP ஆகும். TPP யிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு இது இறுதி செய்யப்பட்டது.

  • TPP 11-ல் ஆஸ்திரேலியா, புருனே, கனடா, சிலி, மலேசியா, ஜப்பான், மெக்ஸிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய 11 நாடுகள் உள்ளன.
  • வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (NAFTA - North American Free Trade Agreement) மற்றும் ஐரோப்பிய யூனியன் (European Union-EU) ஆகியவற்றைத் தொடர்ந்து உலகின் மூன்றாவது பெரிய வர்த்தக மண்டலம் (Trade Bloc) இதுவாகும்.
  • இந்த 11 நாடுகளுள் 6 நாடுகள் தங்களுடைய உள்நாட்டளவில் இந்த ஒப்பந்தத்தினை உறுதி செய்த (Ratify) 60 நாட்கள் கழித்து இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்.
  • மருந்துப் பொருட்களுடைய அறிவுசார் சொத்துரிமையின் பாதுகாப்பைப் பெருக்குவதற்கான விதிகள் உட்பட TPP உடன்படிக்கையில் அமெரிக்கா வேண்டிய சில தேவைகள் இப்புதிய ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டுள்ளன.
  • 12 உறுப்பு நாடுகளைக் கொண்ட TPP-யிலிருந்து 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா வெளியேறியது.
  • அமெரிக்கா TPP-யிலிருந்து  வெளியேறிய பிறகு, அதனைக் குறித்து கருதாது TPPயை    முன்னெடுத்துச் செல்ல பிற 11 நாடுகள் முடிவு செய்தன. இத்தகு வகையில் இந்த ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்