உலகின் முன்னணி லஞ்ச ஒழிப்பு தர நிர்ணய அமைப்பான டிரேஸ் இன்டர்நேஷனல் ஆனது, 2019 ஆம் ஆண்டிற்கான “TRACE லஞ்ச அபாய மேட்ரிக்ஸின்” (TRACE மேட்ரிக்ஸ்) பதிப்பை வெளியிட்டுள்ளது.
TRACE மேட்ரிக்ஸ் என்பது 200 நாடுகள், ஆட்சிப் பிரதேசங்கள் மற்றும் தன்னாட்சி & பகுதி தன்னாட்சிப் பிராந்தியங்களில் உள்ள வணிக லஞ்ச அபாயத்தை அளவிடக் கூடிய ஒரு உலகளாவிய வர்த்தக லஞ்ச அபாய மதிப்பீட்டுக் கருவியாகும்.
மொத்த அபாய மதிப்பெண் 48 உடன், அண்டை நாடான சீனாவை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. சீனாவின் மதிப்பெண் 59 ஆகும்.
மிகக் குறைந்த லஞ்ச அபாயம் கொண்ட நாடுகள்: நியூசிலாந்து, நார்வே, டென்மார்க், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகியவையாகும்.
அதிக லஞ்ச அபாயம் கொண்ட நாடுகள்: சோமாலியா, தென் சூடான், வட கொரியா, ஏமன் மற்றும் வெனிசுலா ஆகியவையாகும்.