தமிழ்நாடு காவல்துறை “TrackKD” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாநிலம் முழுவதும் காணப்படும் அறியப்பட்டக் குற்றவாளிகளை நேரடியாக கண்காணிப்புச் செய்வதற்கு இந்தச் செயலி அவர்களுக்கு உதவும்.
மாநிலத்தில் உள்ள 39 மாவட்டங்கள் மற்றும் ஒன்பது ஆணையரகங்களைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட தொடர் குற்றவாளிகளின் விவரங்கள் எண்ணிம மயமாக்கப் பட்டுள்ளன.
குற்றத்தின் தன்மை, செயல் முறை மற்றும் குற்றத்துடன் தொடர்புடைய கும்பல் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தேகப்படக் கூடிய வகையிலான நபர்களை இந்தச் செயலி வகைப்படுத்தும் என்பதோடு, இது அனைத்து வகையான குற்றவாளிகளின் பெயர்களைக் கொண்ட நீண்டப் பட்டியலைக் குறைப்பதற்குப் புலனாய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.