‘ஸ்பாட்டட்’ (SPOTTED) என்ற தலைப்பில் ‘சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம்: நடந்து கொண்டிருக்கும் வேட்டையாடுதல் மற்றும் இந்தியாவில் சிறுத்தைகளின் சட்டவிரோத வர்த்தகம் பற்றிய பார்வை’ என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையை TRAFFIC இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 2015-2019 ஆண்டிற்கு இடையில் மொத்தம் 747 சிறுத்தை இறப்புகளில் 596 சிறுத்தைகள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றும் வேட்டையாடுதல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வேட்டையாடுதல் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.
வனவிலங்கு வர்த்தகக் கண்காணிப்பு வலையமைப்பான TRAFFIC என்பது பல்லுயிர்த் தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய இரண்டின் பின்னணியில் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் வர்த்தகத்தில், உலகளவில் செயல்படும் ஒரு முன்னணி அரசு சாரா அமைப்பாகும்.
இது இயற்கைக்கான உலகளாவிய நிதியம் மற்றும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் ஆகியவற்றின் ஒரு மூலோபாயக் கூட்டணியாக 1976 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.