TRAI ஆணையத்தின் புதிய தொலைத்தொடர்பு விதிமுறைகள் 2024
December 26 , 2024 11 hrs 0 min 40 0
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது, சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (பன்னிரண்டாவது திருத்தம்) விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
குறுஞ்செய்தி (SMS) மற்றும் தொலைபேசி அழைப்புப் பலன்களை மட்டுமே கொண்டு கட்டணத் திட்டங்களை வழங்குமாறு சேவை வழங்கீட்டு நிறுவனங்களுக்கு இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சுமார் 150 மில்லியன் 2G பயனர்களுக்கும் இரண்டு SIM அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பயனர்கள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் சேவைகளுக்கு மட்டுமே பணம் செலுத்த வழி வகுக்கிறது.
TRAI நிறுவனமானது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் சிறப்புக் கட்டணத் திட்டங்களின் (STV) செல்லுபடிக் காலத்தினை 90 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரிக்குமாறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.