TNPSC Thervupettagam

TRAI ஆணையத்தின் புதியக் கட்டமைப்பு

February 26 , 2025 14 hrs 0 min 34 0
  • இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது, 2023 ஆம் ஆண்டு தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ், தன் ஒளிபரப்புச் சேவைகளை வழங்கச் செய்வதற்கான சேவை அங்கீகாரங்களுக்கான கட்டமைப்பில் அதன் பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
  • இது 1885 ஆம் ஆண்டு இந்தியத் தந்திச் சட்டத்தினால் நிர்வகிக்கப்படும் முந்தைய ஒழுங்குமுறைக் கட்டமைப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் ஒரு மிக குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
  • ஒரே இடத்தில் அமைந்த பல்வேறு ஒளிபரப்புச் சேவை வழங்கீட்டு முறையினை முடிவுக்குக் கொண்டுவருதல், DTH கட்டணங்களை சுழியாகக் குறைத்தல் மற்றும் உள் கட்டமைப்புப் பகிர்வை ஊக்குவித்தல் போன்ற புதிய பரிந்துரைகள் இதில் அடங்கும்.
  • இணைய நெறிமுறைவழி தொலைக்காட்சி (IPTV) நிகர மதிப்பிற்கான தேவை நீக்கப் பட்டது.
  • தொலைத்தொடர்பு பொறியியல் மையத்தின் தரநிலைகளை அமைப்பதன் மூலம், ஒன்றோடொன்று ஒருங்கி இருந்து இயங்கக் கூடிய செட் டாப் பாக்ஸ் (STB) பயன்பாடு ஊக்குவிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்