ஒடிசா மாநிலத்தின் சிமிலிபால் புலிகள் வளங்காப்பகத்தில், அதன் காடுகளுக்குள் வேட்டையாடுபவர்கள் மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் பற்றிய சில நிகழ்நேர எச்சரிக்கைகளை அனுப்புகின்ற, ஒரு செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்பட்ட 100 முதல் 150 புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவை மிகவும் ஒரு இயல்பான நிலையில் குறைந்த ஆற்றல் பயன்பாட்டு முறையில் இயங்குகின்றன ஆனால் அவை நடமாட்டத்தை கண்டறிந்து புகைப்படத்தை எடுக்கும் போது உயர் ஆற்றல் பயன்பாட்டு முறைக்கு மாறுகின்றன.
அந்தப் புகைப்படக் கருவியானது பின்னர் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்டறிதலை மேற்கொள்கிறது அதாவது படத்தில் உள்ள 'விலங்குகள்', 'மனிதர்கள்' மற்றும் 'வாகனங்கள்' போன்ற பல்வேறு பொருள்களை வேறுபடுத்துவதற்காக என்று அதனுள் உள்ள சில்லுகளைப் பயன்படுத்துகிறது.
செயற்கை நுண்ணறிவு தேவையான சூழலில் ஒரு ஒளிப்படக் கருவியுடன் இணைக்கப் பட்ட தகவல் தொடர்பு அமைப்பைப் பயன்படுத்தி சுமார் 30 - 40 வினாடிகளில் ஒரு புகைப்படத்தினை இறுதிப் பயனருக்குத் தன்னியக்கமாக அனுப்புகிறது.
TrailGuard AI ஆனது, சிமிலிபாலில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு வேண்டி கடந்த 10 மாதங்களில், 96 வேட்டையாடுபவர்களைக் கைது செய்து, 86க்கும் மேற்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளைக் கைப்பற்ற உதவியுள்ளது.