TNPSC Thervupettagam
March 29 , 2022 881 days 505 0
  • TRAPPIST – 1 என்பது அக்வேரியஸ் விண்மீன் திரளிலுள்ள ஒரு செந்நிறக் குள்ள நட்சத்திரம் ஆகும்.
  • 2 மைக்ரான் வானியல் கண்காணிப்பு கருவி மூலம் (2 MAIS) கண்டறியப்பட்டதால், இந்த அமைப்பு இதற்கு முன்பாக 2MASS J23062928 – 0502285 அல்லது K2-112 என்று அழைக்கப் பட்டது.
  • இது 1999 ஆம் ஆண்டில் ஜான் கிஷிஸ் என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது.
  • இது 7.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதால் இது சூரியக் குடும்பத்தை விட பழமையானதாகும்.
  • இதன் நிறை சூரியனின் நிறையில் சுமார் 9% ஆகும்.
  • மேலும்  இதன் ஆரம் வியாழனின் ஆரத்தை விட சற்று பெரியதாகும்.
  • இதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 2,290°C.
  • இது சூரியனிலிருந்து 29 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • ஜேம்ஸ்  வெப் தொலைநோக்கியானது TRAPPIST – 1 அமைப்பை நோக்கி நிலை நிறுத்தப் படும்.
  • இது TRAPPIST – 1 அமைப்பிலுள்ள கோள்களின் வளிமண்டலம் குறித்து ஆராயும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்