TNPSC Thervupettagam

TReDS முறையில் பரிவர்த்தனை செய்யும் முதல் பொதுத்துறை நிறுவனம்

August 22 , 2018 2159 days 651 0
  • இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆனது வர்த்தக ரசீதுகள் தள்ளுபடி அமைப்பு (TReDS) மேடையில் பரிவர்த்தனை செய்த முதல் பொதுத் துறை (PSU) நிறுவனமாகியுள்ளது.
  • இந்த பரிவர்த்தனை பரோடா வங்கி (BOB) மூலமாக நிதியுதவி செய்யப்பட்டது.
  • இந்த TReDS தளமானது பல நிதி நிறுவனங்களிடமிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) வர்த்தக பெறுதல்களுக்கு நிதியளிக்க உதவுவதற்கான ஒரு நிகழ்நிலை மின்னணு நிறுவன தொழில் நுட்பமாகும்.
  • TReDS என்பதன் விரிவாக்கம் Trade Receivables Discounting System என்பதாகும்.
  • அக்டோபர் 2017ல் மத்திய அரசானது சிறு, குறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கு அனைத்து பெரிய பொதுத்துறை நிறுவனங்களும் TReDS தளத்தில் இணைவதை கட்டாயமாக்கியுள்ளது.
  • இந்திய வரவுகள் பரிமாற்றம் (Receivable Exchange of India) ஆனது இந்தியாவின் முதல் TReDS தளமாகும். இது
    • தேசிய பங்குச் சந்தை
    • இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
    • பாரத ஸ்டேட் வங்கி
    • ஐசிஐசிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றால் ஊக்குவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்