மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமான பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென்பொருள் அறிவியலுக்கான மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவானது “TriboE முக உறை” என்று அழைக்கப்படும் முக உறையைத் தயாரிப்பதற்கான ஒரு செய்முறையை உருவாக்கியுள்ளது.
இது ஆச்சரியப் படத்தக்க வகையில் எந்தவொரு வெளிப்புற ஆற்றலும் இல்லாமல் நோய்த் தொற்றின் நுழைவைத் தடுப்பதற்காக மின் அயனிகளை தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது.
இது மின்னியலைச் சார்ந்துள்ளது.
இந்த டிரைபோ மின் விளைவானது ட்ரைபோ மின் அயனியாக்கம் என்று அழைக்கப் படுகின்றது.
இது ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் தான் கொண்டிருந்த தொடர்பைப் பிரித்த பின்னர் அதன் சில பொருள்கள் மின்னூட்டம் பெற்றதாக மாற்றப் படும் வகையில் ஏற்படும் தொடர்பு மின்மயமாக்கலின் ஒரு வகையாகும்.