பாரம்பரிய அறிவினுடைய (Traditional Knowledge) திருட்டோடு தொடர்புடைய பிரச்சனைகள் மீதான உலக வர்த்தக நிறுவனத்தின் கலந்துரையாடலை புத்துயிரூட்டுவதற்காக 2018 ஆம் ஆண்டின் ஜூன் 7 முதல் 8 ஆம் தேதி வரை ஜெனிவாவில் TRIPS – CBD இணைப்பு (TRIPS- CBD Linkage) மீது சர்வதேச கருத்தரங்கு நடைபெற உள்ளது.
TRIPS என்பதன் விரிவாக்கம் அறிவுசார் சொத்துரிமையின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் மீதான சர்வதேச உடன்படிக்கை. (International Conference on Trade-Related Aspects of Intellectual Property Rights - TRIPS).
CBD என்பதன் விரிவாக்கம் உயிரியல் பல்வகைத் தன்மை மீதான உடன்படிக்கை. (Convention on Biological Diversity - CBD).
இந்த மாநாடானது இந்திய அரசு, உலக வர்த்தக நிறுவனத்தின் ஆய்வுகளுக்கான மையம் (Centre for WTO Studies), வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இந்திய நிறுவனம் மற்றும் ஜெனிவாவில் அமைந்துள்ள தெற்கு மையம் எனும் அரசுகளுக்கிடையிலான அமைப்பு ஆகியவற்றின் கூட்டிணைவால் நடத்தப்படுகின்றது.
பின்னணி
2008 ஆம் ஆண்டு வளரும் உலக நாடுகள் TRIPS – CBD அமைப்புகளினிடையே இணைப்பை உண்டாக்கவும், TRIPS ஒப்பந்தத்தைத் திருத்தியமைப்பதற்காகவும், ஆப்பிரிக்கா, கரிபியன் மற்றும் பசுபிக் ஆகிய பகுதியைச் சேர்ந்த நாடுகள் உள்ளடங்கிய 109 நாடுகளின் கூட்டிணைவை அமைக்க ஐரோப்பிய யூனியனின் ஆதரவைப் பெற்றன.
TRIRS – CBD இணைப்பானது இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த இணைப்பானது உயிரியல்-திருடலை (bio-piracy) களைய முயல்கின்றது.
உயிரியல் பல்வகைத் தன்மை மீதான உடன்படிக்கையானது உயிரியல் பல்வகைத் தன்மையின் நீடித்த மேம்பாடு மீதான ஒப்பந்தமாகும். 196 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தமானது 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி அமல்பாட்டிற்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களாவன-
உயிரியல் பல்வகைத் தன்மையை பாதுகாத்தல்- Conservation of biological diversity
அதனுடைய கூறுகளின் நீடித்த முறையிலான பயன்பாடு- Sustainable use of its components.
மரபியற் மூல ஆதாரங்களின் பயன்பாட்டினால் உண்டாகும் பயன்களை நியாயமான முறையில் சமமாக பகிர்தல்- Fair and equitable sharing of benefits arising out of the utilisation of genetic resources.