TNPSC Thervupettagam

TRIPS – CBD இணைப்பு

June 7 , 2018 2363 days 819 0
  • பாரம்பரிய அறிவினுடைய (Traditional Knowledge) திருட்டோடு தொடர்புடைய பிரச்சனைகள் மீதான உலக வர்த்தக நிறுவனத்தின் கலந்துரையாடலை புத்துயிரூட்டுவதற்காக 2018 ஆம் ஆண்டின் ஜூன் 7 முதல் 8 ஆம் தேதி வரை ஜெனிவாவில் TRIPS – CBD இணைப்பு (TRIPS- CBD Linkage) மீது சர்வதேச கருத்தரங்கு நடைபெற உள்ளது.
    • TRIPS என்பதன் விரிவாக்கம் அறிவுசார் சொத்துரிமையின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் மீதான சர்வதேச உடன்படிக்கை. (International Conference on Trade-Related Aspects of Intellectual Property Rights - TRIPS).
    • CBD என்பதன் விரிவாக்கம் உயிரியல் பல்வகைத் தன்மை மீதான உடன்படிக்கை. (Convention on Biological Diversity - CBD).
  • இந்த மாநாடானது இந்திய அரசு, உலக வர்த்தக நிறுவனத்தின் ஆய்வுகளுக்கான மையம் (Centre for WTO Studies), வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இந்திய நிறுவனம் மற்றும் ஜெனிவாவில் அமைந்துள்ள தெற்கு மையம் எனும் அரசுகளுக்கிடையிலான அமைப்பு ஆகியவற்றின் கூட்டிணைவால் நடத்தப்படுகின்றது.

பின்னணி

  • 2008 ஆம் ஆண்டு வளரும் உலக நாடுகள் TRIPS – CBD அமைப்புகளினிடையே இணைப்பை உண்டாக்கவும், TRIPS ஒப்பந்தத்தைத் திருத்தியமைப்பதற்காகவும், ஆப்பிரிக்கா, கரிபியன் மற்றும் பசுபிக் ஆகிய பகுதியைச் சேர்ந்த நாடுகள் உள்ளடங்கிய 109 நாடுகளின் கூட்டிணைவை அமைக்க ஐரோப்பிய யூனியனின் ஆதரவைப் பெற்றன.
  • TRIRS – CBD இணைப்பானது இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த இணைப்பானது உயிரியல்-திருடலை (bio-piracy) களைய முயல்கின்றது.
  • உயிரியல் பல்வகைத் தன்மை மீதான உடன்படிக்கையானது உயிரியல் பல்வகைத் தன்மையின் நீடித்த மேம்பாடு மீதான ஒப்பந்தமாகும். 196 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி அமல்பாட்டிற்கு வந்தது.
  • இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களாவன-
    • உயிரியல் பல்வகைத் தன்மையை பாதுகாத்தல்- Conservation of biological diversity
    • அதனுடைய கூறுகளின் நீடித்த முறையிலான பயன்பாடு- Sustainable use of its components.
    • மரபியற் மூல ஆதாரங்களின் பயன்பாட்டினால் உண்டாகும் பயன்களை நியாயமான முறையில் சமமாக பகிர்தல்- Fair and equitable sharing of benefits arising out of the utilisation of genetic resources.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்