இந்தியக் கடற்படையின் முக்கியக் கடல்சார் பயிற்சியான TROPEX எனப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சியானது தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நடவடிக்கை அளவிலானப் பயிற்சியானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுவதோடு, அனைத்து இந்தியக் கடற்படைகள், இந்திய இராணுவம், இந்திய விமானப் படை மற்றும் கடலோரக் காவல்படை சார் கப்பல்கள் ஆகியவை இதில் பங்கேற்கின்றன.
இந்தப் பயிற்சியானது ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மூன்று மாத காலங்களுக்கு நடத்தப் படுகிறது.