TNPSC Thervupettagam
May 14 , 2023 434 days 266 0
  • நாசா நிறுவனம் நியூசிலாந்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தளத்திலிருந்து செயல்படும் வகையில், வெப்பமண்டலச் சூறாவளிகளைக் கண்காணித்து நிகழ்நேர அடிப்படையில் அந்தத் தரவுகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு சிறிய செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
  • TROPICS ஆய்வுத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டமானது, பேரழிவினை உண்டாக்கும் புயல்கள் குறித்த சில வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
  • TROPICS என்பது, மழைப் பொழிவு கட்டமைப்பு மற்றும் புயல்களின் தீவிரத்தினை சிறிய செயற்கைக் கோள் திரள்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நேரக் கண்காணிப்பு என்பதன் சுருக்கமாகும்.
  • இது மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பற்றிய தகவலை வழங்குவதோடு, புயல்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதனை மணி நேர அடிப்படையில் வானியல் நிபுணர்கள் கண்காணிக்க உதவுகிறது.
  • இந்தப் புதிய புயல் கண்காணிப்புக் கலங்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை புயல் உருவான பகுதி மீது பறந்து ஆய்வு செய்யக் கூடியது.
  • தற்போதையச் செயற்கைக் கோள்கள் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை சூறாவளி பகுதி மீது பறக்கக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்