TNPSC Thervupettagam

TRUST முன்னெடுப்பு

February 19 , 2025 4 days 39 0
  • TRUST என்ற முன்னெடுப்பின் கீழ், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆனது தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான தடைகளை வெகுவாக நன்கு குறைத்து, ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்து மற்றும் உயர் தொழில்நுட்ப வர்த்தகத்தினை நன்கு மேம்படுத்த உள்ளன.
  • TRUST என்பது 'Transforming Relationship Utilizing Strategic Technology - உத்தி சார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளின் தொடர்பை மாற்றியமைத்தல்' என்பதைக் குறிக்கிறது.
  • இந்த இருதரப்பு முன்னெடுப்பானது, லித்தியம் மற்றும் அருமண் தனிமங்கள் (REEs) போன்ற முக்கிய கனிமங்களை மீட்டெடுப்பதிலும் அதனைச் செயலாக்குவதிலும் சில கூட்டுறவுகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • மருந்துகளுக்கான வலுவான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கான TRUST முன்னெடுப்புகளின் முயற்சியானது, பெரும்பாலும் லித்தியம், மெக்னீசியம், துத்த நாகம் மற்றும் செலினியம் போன்ற முக்கிய கனிமங்களைச் சார்ந்துள்ளச் செயல் பாட்டு மருந்துப் பொருட்களில் (APIs) கவனம் செலுத்த இயலும்.
  • இந்தியா 2023 ஆம் ஆண்டில் கனிமப் பாதுகாப்பு கூட்டாண்மையில் (MSP) இணைந்தது.
  • MSP என்பது இந்த முக்கியக் கனிம விநியோகச் சங்கிலிகளில் பொது மற்றும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட சுமார் 14 நாடுகளின் அமெரிக்கா தலைமையிலான கூட்டாண்மையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்