TNPSC Thervupettagam

TSENTR 2019 - ரஷ்யாவில் போர் விளையாட்டுகள்

September 7 , 2019 1813 days 540 0
  • ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் “TSENTR 2019” என்ற பல நாடுகள் கலந்து கொள்ளும் பெரிய அளவிலான போர்ப் பயிற்சியில் இந்திய ராணுவம் பங்கேற்க இருக்கின்றது.
  • இந்தப் பயிற்சியானது செப்டம்பர் 9 முதல் 23 வரை ரஷ்யாவின் ஓரன்பேர்க்கில் உள்ள டோங்குஸ் பயிற்சித் தளத்தில் நடைபெற உள்ளது.
  • பாகிஸ்தான், சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த படைகளும் இந்த பயிற்சியில் பங்கேற்க விருக்கின்றன.
  • இந்தியப் படைகள் நடத்திய பாலகோட் வான்வழித் தாக்குதல்களுக்குப் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த படைகள் ஒரு பன்னாட்டுப் பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்