TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 15 , 2020 1530 days 772 0
  • சுருள்பாசி நிலக்கடலை மிட்டாய் ஆனது மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தினால் (CFTRI - Spirulina groundnut Chikki) உருவாக்கப் பட்டுள்ளது.
    • சுருள்பாசி என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளினால் நுகரப்படும் ஒரு நீல நுண்ணுயிரியின் (நீலம் மற்றும் பச்சை நிறப் பாசி) உயிரினத் தொகுதியாகும்.
  • மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழிற்துறை அமைச்சகமானது (MSME - Micro Small and Medium Enterprises) சாம்பியன்ஸ் (Champions – நவீன செயல்முறைகளின் உருவாக்கம் மற்றும் உணர்வுமிக்க பயன்பாடு) என்ற ஒரு இணைய தளத்தைத் தொடங்கியுள்ளது.
    • இந்த இணைய தளமானது இந்திய MSMEகளுக்கு உதவுவதற்காக நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து செரோ எனும் ஆய்வை நடத்த இருக்கின்றது.
    • செரோ சோதனை என்பது தனிநபர்களின் இரத்த சீரம்களைச் சோதனை செய்தல் மற்றும் கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு எதிராக நோய் எதிர்ப்புப் பொருளின் இருப்பைக் கண்டறிதல் என்பதாகும்.
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது “எப்ஐஆர் ஆப்கே துவார் யோஜனா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • காவல் துறையில் இது போன்ற ஒரு புத்தாக்கத் திட்டத்தைத் தொடங்கிய நாட்டின் முதலாவது மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்.
  • அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமானது கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு எதிரான இந்தியாவின் எதிர்வினைகளுக்கு உதவுவதற்காக 8.6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை இந்தியாவிற்கு வழங்க இருக்கின்றது.
    • அமெரிக்க நாடானது பொதுச் சுகாதாரத்தில் உலகில் நாடுகளிடையே இருதரப்பு உதவியை அளிக்கும் ஒரு மிகப்பெரிய நாடாக விளங்குகின்றது.
  • இராஜஸ்தான் மாநில அரசானது சந்தைகளில் கொண்டு வரப்படும், வாங்கப்படும் அல்லது விற்கப்படும் வேளாண் பொருள்களின் மீது 2% கிரிஷக் கல்யாண் என்ற ஒரு கட்டணத்தை விதிக்க இருக்கின்றது.
  • குஜராத் மாநில அரசானது வேளாண் பொருட்கள் உற்பத்திச் சந்தை சட்டம் என்பதின் வரம்பை விரிவுபடுத்துவதற்காக குஜராத் வேளாண் பொருட்கள் உற்பத்தி மற்றும் கால்நடைச் சந்தை (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 1963 என்று அழைக்கப்படும் சட்டத்தின் மீது அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
    • இது கால்நடையை வேளாண் உற்பத்திப் பொருட்களின் கீழ் கொண்டு வருவதையும் விவசாயிகளுக்கு சிறந்த சந்தை அணுகலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பரோசா என்பது ஒடிசாவின் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு என்று பிரத்தியேகமாக ஆலோசனை வழங்கும் ஒரு உதவி மையமாகும்.
  • இந்திய உச்ச நீதிமன்றமானது ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் கொண்டு வர மறுத்துள்ளது.
    • இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அனுராதா பசின் வழக்கு அல்லது காஷ்மீர் இணையச் சேவை வழக்கு என்று பிரபலமாக அறியப்படும் ஒரு வழக்கில், ஜம்மு காஷ்மீரில் கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
  • 2021 ஆம் ஆண்டின் 17 வயதுக்குட்பட்டோருக்கான (FIFA Under 17) பிபா பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா நடத்த இருக்கின்றது.
  • அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பானது 2020 ஆம் ஆண்டின் அர்ஜுனா விருதுக்காக N.பாலா தேவி மற்றும் சந்தேஷ் ஜின்கான் ஆகியோரைப் பரிந்துரை செய்துள்ளது.
    • அர்ஜுனா விருதானது மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தினால் வழங்கப்படும் ஒரு கௌரவ விருதாகும்.
  • சமீபத்தில் விவசாயிகள் எதைப் பயிரிட்டு வளர்க்க வேண்டும் என்று கூறிய நாட்டின் முதலாவது மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்துள்ளது.
    • அம்மாநில அரசானது தற்பொழுது பயிர்ச் சாகுபடியை வரைமுறைப் படுத்த இருக்கின்றது. அம்மாநில அரசு 50 லட்சம் ஏக்கர் அளவில் மட்டும் நெற் பயிர்களை வளர்க்கவும் 10 இலட்சம் ஏக்கர் அளவில் மட்டும் சிவப்பு கிராம் எனப்படும் கொள்ளு வகைப் பருப்பை வளர்க்கவும் வரையறை செய்துள்ளது.
       

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்