TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 21 , 2020 1524 days 660 0
  • டெங்கு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்டதின் படி மே 16 ஆம் தேதியன்று தேசிய டெங்கு தினத்தை இந்தியா அனுசரித்தது.
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது தேசியப் இடப்பெயர்வுத் தகவல் அமைப்பைத் தொங்கியுள்ளது.
    • இது இடப்பெயர்வுத் தொழிலாளர்களுக்கான ஒரு மைய நிகழ்நேரக் களஞ்சியம் ஆகும்.
  • துகள் உலோக மற்றும் புதிய பொருட்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஒரு புதிய உயிரியல் ரீதியாக மக்கும் வகையில் காதினுள் வைக்கப்படும் ஒரு உள்வைப்புப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
    • இந்த உள்வைப்புப் பொருட்கள் இரும்பு – மாங்கனீசு கலவையிலிருந்து உருவாக்கப் பட்டுள்ளன.
  • சமீபத்தில், பாகிஸ்தான் நாடானது டயமெர்-பாஷா எனும் அணையின் கட்டமைப்பிற்காக வேண்டி சீனா ஆற்றல் என்ற ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது.
    • இது கைபர் பக்துன்குவா மற்றும் கில்ஜிட் பல்திஸ்தான் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட வட பாகிஸ்தானில் சிந்து நதியின் மீது அமைந்துள்ளது.
  • சமீபத்தில்  மதுரை இரயில் நிலையமானது தனது சிறந்த சேவைக்காக ஐஎஸ்ஓ 14001 தரச் சான்றிதழை (ISO - International Organization for Standardization/ சர்வதேசத் தரப்படுத்தல் ஆணையம்) பெற்றுள்ளது.
    • ஐஎஸ்ஓ 14001 என்பது செயலூக்கம் உடைய சுற்றுச்சுழல் மேலாண்மை அமைப்பிற்கான (EMS - Environmental management system) தேவைகளைக் குறிப்பிடும் ஒரு சர்வதேசத் தரமாகும்.
  • இந்தியாவிற்குச் செயற்கை சுவாசக் கருவிகளை அமெரிக்கா வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
  • கொரானா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட தேசிய அளவிலான பொது முடக்கத்தைத் தொடர்ந்து தனது விளையாட்டுத் தொடரை மீண்டும் தொடங்கிய உலகின் முதலாவது முக்கியமான விளையாட்டுப் போட்டி ஜெர்மனியின் பண்டெஸ்லிகா ஆகும். 
    • பண்டெஸ்லிகா என்பது “பெடரல் லீக்” எனப்படும் ஜெர்மனியில் நடத்தப்படும் ஒரு முதன்மையான கால்பந்துப் போட்டியாகும். 
  • அமெரிக்க முதலீட்டு நிறுவனமான “ஜெனரல் அட்லான்டிக்” எனும் நிறுவனமானது  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 1.34% பங்கை, அதாவது ரூ.6600 கோடி மதிப்பிலான பங்கை முழுவதும் பிரித்தெடுக்கப்பட்ட அடிப்படையில் கையகப் படுத்த இருக்கின்றது.
    • முகநூல் நிறுவனம், சில்வர் லேக் மற்றும் விஸ்டா சமபங்கு உரிமையாளர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைத் தொடர்ந்து கடந்த 30 நாட்களில் ஜியோ நிறுவனத்தில் செய்யப்பட்ட 4வது மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.
  • ஒரு புதிய உயிரினமானது சுட்டுரைப் படத்தைப் பயன்படுத்திச் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதற்கு ட்ரோகுளோமைசிஸ் டிவிட்டரி என்று பெயரிடப் பட்டுள்ளது.
    • இது “லேபோல் பெனியேல்ஸ்” என்ற ஒரு ஒட்டுண்ணி வகைப் பூஞ்சை இனத்தைச் சேர்ந்ததாகும்.
  • தேசிய சட்ட சேவைகள் ஆணையமானது (NALSA - National Legal Services Authority) தனது அதிகாரப்பூர்வ செய்தி  மடலான நியாயா தீப் எனும் இதழில் பொது முடக்கத்தின் போது விடுதலை செய்யப்பட்ட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • உத்தரப் பிரதேசத்தில் (9977) அதிக எண்ணிக்கையிலான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். இதற்கு அடுத்து ராஜஸ்தானில் 5460 விசாரணைக் கைதிகளும் தமிழ்நாட்டில் 4547 விசாரணைக் கைதிகளும் பஞ்சாப்பில் 3698 விசாரணைக் கைதிகளும் மகாராஷ்டிராவில் 3400 விசாரணைக் கைதிகளும் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்