TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 22 , 2020 1523 days 692 0
  • இந்திய அரசானது எல்லை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக செகாத்கர் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளைச் செயல்படுத்தியுள்ளது.  
    • இக்குழுவானது 2018 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாகும்.
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியானது ரூ.20,500 கோடியை விடுவித்துள்ளது.
    • இந்த நிதியானது கூட்டுறவு வங்கிகள் மற்றும் வட்டார ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவற்றிற்கு ஒரு முன்னணி வள நிதியாகச் செயல்பட இருக்கின்றது.
  • ஆப்கானிஸ்தானின் அதிபரான அஷ்ரப்கானி மற்றும் எதிரணியைச் சேர்ந்தவரான அப்துல்லாஹ் அப்துல்லாஹ் ஆகியோர் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் பல மாதங்களாக நீடித்து வந்த அரசியல் பிரச்சினை அந்நாட்டில் முடிவுக்கு வந்துள்ளது.
  • மே 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
  • சார்ஸ் – Cov–2 வைரசிற்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்து நேர்மறை விளைவுகளை ஏற்படுத்திய உலகின் முதலாவது தடுப்பு மருந்து மாடர்னா கொரானா வைரஸ் தடுப்பு மருந்தாகும்.
    • “mRNA – 1273”  என்ற எதிர்ப்பு மருந்தானது தேசிய சுகாதார நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஹன்கோ என்பது ஜப்பானின் ஒரு தனிப்பட்ட அஞ்சல் தலையாகும்.
    • ஜப்பானில் மிகப் பழமையான ஹன்கோ என்ற பாரம்பரியத்தின் கீழ், தொழிலாளர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக அலுவலகங்களுக்கு வந்து செல்ல வேண்டும்.
  • சமீபத்தில், பினாங்கா அந்தமானிசிஸ் என்ற ஒரு அரிய வகைப் பனை இனமானது திருவனந்தபுரத்தில் (கேரளா) உள்ள ஜவஹர்லால் நேரு வெப்ப மண்டலத் தாவரவியல் தோட்டம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (JNTBGRI - Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute) வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டது.
    • பினாங்கா அந்தமானிசிஸ் என்பது தெற்கு அந்தமான் தீவின் ஹாரியத் மலை தேசியப் பூங்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் அரிய வகைப் பனை மரமாகும்.
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின்  நிர்வாக வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க இருக்கின்றார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.
    • 34 உறுப்பினர்களைக் கொண்ட இந்த வாரியத்தின் தற்போதைய தலைவரான ஜப்பானின் டாக்டர் கிரோகி நகாடானி என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப் படவுள்ளார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்