TNPSC Thervupettagam

Tu-160 குண்டு வீச்சு விமானம்

May 12 , 2023 565 days 300 0
  • உக்ரைன் போரில் Tu-160 எனப்படும் உலகின் மிகப்பெரிய குண்டுவீச்சு விமானத்தினை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது.
  • Tu-160 குண்டுவீச்சு விமானமானது, வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு நாடுகளில் பிளாக் ஜாக் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது 1980 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு மீயொலி, மாறுநிலை நிலைமாற்ற இறக்கை அம்சம் கொண்ட, ஒரு உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும்.
  • இதுவரையில் கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் கனமான இராணுவ விமானங்களில் இது ஒன்றாகும்.
  • அதன் மாபெரும் அளவின் காரணமாக இது "ஒயிட் ஸ்வான்" என்ற புனைப் பெயரைப் பெற்றது.
  • இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,200 கிமீ அல்லது மேக் 1.6 ஆகும்.
  • இது 12,000 கி.மீக்கும் அதிகமான தூரம் செல்லக் கூடியது என்பதோடு இதில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்பும் வகையில் விமானத்தினுள் அதற்கான ஒரு அமைப்பு பொருத்தப் பட்டுள்ளது.
  • இந்தியா தனது உத்திசார் சக்தியை அதிகரிப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து குறைந்தது ஆறு Tu-160 குண்டுவீச்சு விமானங்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்