உக்ரைன் போரில் Tu-160 எனப்படும் உலகின் மிகப்பெரிய குண்டுவீச்சு விமானத்தினை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது.
Tu-160 குண்டுவீச்சு விமானமானது, வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு நாடுகளில் பிளாக் ஜாக் என்றும் அழைக்கப்படுகிறது.
இது 1980 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு மீயொலி, மாறுநிலை நிலைமாற்ற இறக்கை அம்சம் கொண்ட, ஒரு உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும்.
இதுவரையில் கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் கனமான இராணுவ விமானங்களில் இது ஒன்றாகும்.
அதன் மாபெரும் அளவின் காரணமாக இது "ஒயிட் ஸ்வான்" என்ற புனைப் பெயரைப் பெற்றது.
இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,200 கிமீ அல்லது மேக் 1.6 ஆகும்.
இது 12,000 கி.மீக்கும் அதிகமான தூரம் செல்லக் கூடியது என்பதோடு இதில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்பும் வகையில் விமானத்தினுள் அதற்கான ஒரு அமைப்பு பொருத்தப் பட்டுள்ளது.
இந்தியா தனது உத்திசார் சக்தியை அதிகரிப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து குறைந்தது ஆறு Tu-160 குண்டுவீச்சு விமானங்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.