August 16 , 2024
99 days
199
- மத்திய அரசானது, நிதித் துறை செயலாளர் T.V.சோமநாதனை புதிய அமைச்சரவைச் செயலாளராக இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமித்துள்ளது.
- தற்போது, இந்தியாவின் அதிக காலம் பதவி வகித்த அமைச்சரவை செயலாளர் என்ற பெருமையினைத் தக்க வைத்திருக்கும் இராஜீவ் கௌபாவினை அடுத்து அவர் பதவி ஏற்க உள்ளார்.
- இதுவரையில், 1972 ஆம் ஆண்டு நவம்பர் 02 முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை B.D. பாண்டே அதிக காலம் அமைச்சரவை பதவியினை வகித்தவர் ஆவார்.
- அமைச்சரவை செயலாளராக பதவியேற்கும் இரண்டாவது நிதித் துறை செயலாளர் சோமநாதன் ஆவார்.
- இந்தப் பதவிக்கு உயர்த்தப்பட்ட (1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்) முதல் நிதித் துறை செயலாளர் P.K. கௌல் ஆவார்.
Post Views:
199