செர்பியாவில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் 16 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கால்பந்து அணியானது தஜிகிஸ்தானை வீழ்த்தி நான்கு நாடுகளுக்கிடையேயான கால்பந்து போட்டித் தொடரின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த நான்கு நாடுகளுக்கிடையேயான கால்பந்து தொடரில் நான்கு நாடுகளைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கால்பந்து அணிகள் பங்குபெற்றன. அவையாவன-இந்தியா, தஜிகிஸ்தான், செர்பியா மற்றும் ஜோர்டான் ஆகியனவாகும்.