கோலாலம்பூரில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் தனது முதல் கோப்பையை வென்றுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் ஆப்கானின் இக்ரம் அலி கில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரான முஜிப் ஜத்ரன் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.