TNPSC Thervupettagam

U-WIN இணைய தளம்

July 27 , 2024 36 days 109 0
  • 2030 ஆம் ஆண்டில் எந்தவொரு தடுப்பூசிகளையும் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதற்கான முக்கியமான படிநிலைகளில் U-Win இணைய தளமும் ஒன்றாகும்.
  • U-WIN என்பது குழந்தைப் பருவ தடுப்பூசிக்கான இயங்கலை தடுப்பூசி மேலாண்மை இணைய தளம் ஆகும். இது கோவிட்-19 பெருந்தொற்றின் போது பயன்படுத்தப்பட்ட CoWIN தளம் போன்றதாகும்.
  • ஆறு வயது வரையிலான குழந்தைகள், மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆதார் போன்ற அரசாங்க அடையாள அட்டை மற்றும் அவர்களின் கைபேசி எண்களைப் பயன்படுத்தி U-WIN இணைய தளத்தில் பதிவு செய்யப்படுகிறார்கள்.
  • பதிவு செய்தவுடன், ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து 25 தடுப்பூசிகளின் தவணைகள் பற்றிய பதிவுகளையும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொடுக்கப் பட்ட இரண்டு தடுப்பூசிகள் பற்றிய தகவல்களும் சேர்க்கப் படும்.
  • பெற்றோர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களைப் பயன்படுத்தி எண்ணிம முறையிலான தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
  • இது அனைத்துப் பிறப்புகளையும், பிறக்கும் போது கொடுக்கப்படும் போலியோ, ஹெபடைடிஸ் B மற்றும் காசநோய்க்கு எதிரான மூன்று தடுப்பூசிகள், குழந்தையின் பிறப்பு எடை மற்றும் பிறக்கும் போது காணப்பட்ட உடல் குறைபாடுகள் ஆகியவை குறித்த தகவல்களையும் பதிவு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்