TNPSC Thervupettagam

U19 உலகக் கோப்பை போட்டி 2022

February 7 , 2022 894 days 465 0
  • மேற்கு இந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் என்ற மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியானது இங்கிலாந்து அணியினை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • இதற்கு முன் 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற இந்திய அணி தற்போது, ஐந்தாவது பட்டத்தைத் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.
  • முகமது கைஃப், விராட் கோலி, உன்முக்த் சந்த் மற்றும் பிருத்வி ஷா ஆகியோருக்குப் பிறகு இந்தப் பட்டத்தை வென்ற ஐந்தாவது இந்திய அணித்தலைவர் என்ற ஒரு பெருமையை யாஷ் துல் பெற்றார்.
  • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2022 ஆம் ஆண்டு ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக இந்தியாவின் ராஜ் அங்கத் பாவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்