ஐக்கிய அரபு அமீரகம், அமீரக ஆண்களுக்கான கட்டாய இராணுவ சேவையினை 12 மாதங்களிலிருந்து 16 மாதங்களாக நீட்டித்துள்ளது.
உயர்கல்வி டிப்ளமோ (அ) அதற்கு சமமான தகுதி உடைய ஆண்கள் 12 மாதங்களுக்குப் பதிலாக 16 மாதங்கள் பணி ஆற்றலாம்.
அதே நேரத்தில் உயர்கல்வி தகுதியில்லாதவர்கள் அவர்களது பணியினை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு செய்யலாம்.
இது பெண்களுக்கான பங்களிப்பிற்கும் வாய்ப்பளித்துள்ளது. இதற்காக அவர்களின் விருப்பத்துடன் அவர்களின் சட்டரீதியான பாதுகாப்பாளரிடமிருந்து ஒப்புதலையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் 9 மாதங்களுக்கு மட்டுமே பணியாற்ற முடியும்.
அமீரக ஆண்களுக்கான கட்டாய இராணுவ சேவையினை UAE 2014-ல் தொடங்கியது.
சர்வதேச அளவில் வெளிநாட்டில் உள்ள ஏமன் அரசை மீண்டும் பதவியில் அமர்த்த ஈரானுடன் கூட்டுசேர்ந்த ஹவுதி இயக்கத்திற்கு எதிராக 2015-ல் ஏமனில் தலையிட்ட சவுதியின் தலைமையிலான இராணுவக் கூட்டணியின் முக்கிய உறுப்பினர் UAE ஆகும்.