TNPSC Thervupettagam

UAE-ஆல் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கோள்

October 30 , 2018 2090 days 647 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE United Arab Emirates) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கலிஃபாசாட் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை ஜப்பானின் ராக்கெட்டானது விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
  • இந்த புறப்பாடானது ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து தொடங்கப்பட்டது.
  • H - 2A என்ற பெயருடைய இந்த ஜப்பானிய ராக்கெட்டானது ஜப்பானின் பசுமை இல்ல வாயுக்கள் கண்காணிப்பு செயற்கைக் கோளான இபுகி-2-என்ற செயற்கைக் கோளையும் சுமந்து சென்றது.
  • UAE ஆனது 2019-ல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனது முதல் இரண்டு விண்வெளி வீரர்களை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • மேலும் 2020 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வு விண்கலத்தை அனுப்பவும் 2117 ஆம் ஆண்டில் அங்கே அறிவியல் நகரத்தை உருவாக்குவதையும் UAE இலக்காகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்