ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE United Arab Emirates) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கலிஃபாசாட் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை ஜப்பானின் ராக்கெட்டானது விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
இந்த புறப்பாடானது ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து தொடங்கப்பட்டது.
H - 2A என்ற பெயருடைய இந்த ஜப்பானிய ராக்கெட்டானது ஜப்பானின் பசுமை இல்ல வாயுக்கள் கண்காணிப்பு செயற்கைக் கோளான இபுகி-2-என்ற செயற்கைக் கோளையும் சுமந்து சென்றது.
UAE ஆனது 2019-ல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனது முதல் இரண்டு விண்வெளி வீரர்களை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும் 2020 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வு விண்கலத்தை அனுப்பவும் 2117 ஆம் ஆண்டில் அங்கே அறிவியல் நகரத்தை உருவாக்குவதையும் UAE இலக்காகக் கொண்டுள்ளது.