TNPSC Thervupettagam

UAPA சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

May 22 , 2024 189 days 177 0
  • நியூஸ் கிளிக் தளத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செய்தியாசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவினை டெல்லி காவல்துறையினர் கைது செய்து, 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் சிறையில் அடைத்ததை உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது.
  • வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தினை மீறி அந்தச் செய்தி வழங்கீட்டு இணைய தளம் வெளிநாட்டு நிதியைப் பெற்றதாகக் கூறப் படுகிறது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் புர்கயஸ்தா கைது செய்யப் பட்டார்.
  • நியூஸ்க்ளிக் இணையதளத்திற்கு சீனப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக என்று ஒரு அமெரிக்க கோடீஸ்வரரிடமிருந்து நிதி பெறுவதாக நியூயோர்க் டைம்ஸ் இதழில் வெளி வந்த கட்டுரையினைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல சோதனைகளுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்