TNPSC Thervupettagam

UAV தொழிற்நுட்பம் செயற் - பணிப்படை

April 17 , 2018 2287 days 689 0
  • நாட்டில் டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களினுடைய தொழிற்நுட்பங்களின் (unmanned aerial vehicle-UAV) அமல்பாட்டினை விரைவுபடுத்தி அவற்றினை கண்காணிக்கவும் (fast-track)  அவற்றின் அமல்பாட்டிற்கு திட்ட வரைபடம் (road map) ஒன்றைத் தயாரிக்கவும் 13 உறுப்பினர்கள் கொண்ட செயற்பணிப் படையை (task force)  மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது.
  • விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் (Minister of State for Civil Aviation) ஜெயந்த் சின்ஹா இந்த 13 உறுப்பினர்கள் கொண்ட செயற் பணிப் படையின் தலைவராவார்.
  • விமானப் போக்குவரத்துத்துறை நிபுணர்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த பணிப்படையில் பங்கேற்றுள்ளனர்.
  • ஆளில்லா விமானத் தொழிற்நுட்பத்தின் வெளியீடுகள், காலவரையறைகள் (timelines), அமல்பாடு மற்றும் மதிப்பாய்வு பொறிமுறை (implementation and review mechanism), UAV தொழிற்நுட்பத்தின் அமல்பாட்டிற்கான அளவிடத்தகு அளவீடுகள் (measurable metrics) ஆகியவை உள்ளடக்கிய  திட்ட வரைபடத்தை இந்த செயற்பணிப் படை தயார் செய்ய உள்ளது.    இந்த செயற்பணிப் படை பிரிவானது ஆளில்லா விமானத் தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டில் தொழிற்துறையின் செயற்பாத்திரத்தை (Roles) தெளிவாக வரையறுக்கும்.
  • இச்செயற்குழுவானது ஆறு மாதங்களுக்குள் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்