உலக கோடீஸ்வரர்களின் செல்வ வளமானது கடந்த ஆண்டை விட சுமார் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.
மொத்தக் கோடீஸ்வரர்களின்/பில்லியனர்களின் எண்ணிக்கையானது ஓராண்டிற்கு முன்பு 2,544 ஆக இருந்து 2,682 ஆக உயர்ந்துள்ள நிலையில் அவர்களின் சொத்து மதிப்பு 12 டிரில்லியன் டாலரில் இருந்து 14 டிரில்லியன் டாலர் ஆகவும் உயர்ந்துள்ளது.
2015 ஆம் ஆண்டில், அவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு 6.3 டிரில்லியன் டாலராக இருந்தது.
அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 751 என்ற எண்ணிக்கையில் இருந்து 835 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சுமார் 520 என்ற எண்ணிக்கையில் இருந்து 427 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு பங்கு அதிகரித்து 185 ஆகவும், அவர்களின் சொத்து மதிப்பு 40 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து சுமார் 906 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது.