TNPSC Thervupettagam
February 14 , 2025 13 days 61 0
  • பிராந்திய விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக என்று மத்திய அரசானது அதன் மிக முதன்மையான UDAN (உடே தேஷ் கா ஆம் நாக்ரிக்) திட்டத்தின் அடுத்த கட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • UDAN 5.5 ஆனது தொலைதூரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகளில் தொலைதூரப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த முயல்கிறது.
  • இந்தத் திட்டத்தின் சமீபத்தியக் கட்டத்தில், கடல் சார் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 20க்கும் குறைவான பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட மிகவும்  சிறிய விமானங்களுடன் பிரத்தியேகச் சேவை வழங்கப்படுகின்ற சில வழித்தடங்கள் உருவாக்கப் படும்.
  • 5.5 என்ற சமீபத்திய கட்டமானது, நீர்நிலைகள், குளங்கள் மற்றும் அணைகள் உள்ளிட்ட சுமார் 80 நீர்நிலைகளுக்கு இடையே உள்ள கடல் சார் விமானப் போக்குவரத்து வழித் தடங்களை வரைபடமாக்குவதற்கு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
  • இந்தத் திட்டத்தில் சேவை வழங்கீட்டு நிறுவனங்கள் ஹெலிகாப்டர் வழித் தடங்களை வரைபடமாக்குவதற்காக என, சுமார் 400 ஹெலிகாப்டர் இறங்கு தளங்களும் சேர்க்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்