UDAN திட்டம் ஆனது 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதியன்று அறிமுகப் படுத்தப்பட்டது.
UDAN (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) என்பது பிராந்திய விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையும், விமானச் சேவையினை மலிவு விலையிலானதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 601 வழித்தடங்களும் 71 விமான நிலையங்களும் செயல் பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
71 விமான நிலையங்கள், 13 ஹெலிபோர்ட்கள் (ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள்) மற்றும் 2 நீர் வழி இயங்கும் விமானங்கள் என மொத்தம் 86 விமான நிலையங்கள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் சுமார் 74 ஆக இருந்த செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 157 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது.