பொது விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) ஆனது உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (UDAN) திட்டத்தின் 5.4 என்ற பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக ரத்து செய்யப்பட்ட வழித்தடங்களுக்கான ஏலங்கள் புதிய ஏலங்களாக UDAN 5.4 திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
இது மேலும் நாட்டில் உள்ள விமான சேவை வழங்கப்படாத மற்றும் குறைவான அளவில் சேவை வழங்கப்படும் வழித்தடங்களில் விமான சேவை இணைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
UDAN திட்டம் தொலைதூர அல்லது விமான சேவை வழங்கப்படாதப் பகுதிகளுக்கு விமான சேவை இணைப்பை மேம்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
கூடுதலாக, MoCA அமைச்சகம் இந்தியாவில் கடல் சார் விமான நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களையும் அறிமுகப் படுத்தியுள்ளது.