கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+) என்ற ஒரு அறிக்கையினை சமீபத்தில் ஒன்றியக் கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2023-24 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 24.8 கோடி மாணாக்கர் சேர்க்கை பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டுகளை விட 2023-24 ஆம் ஆண்டில் மொத்த மாணாக்கர் சேர்க்கை ஒரு கோடிக்கு மேல் குறைந்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டில், பள்ளியில் மாணாக்கர்களின் மொத்தச் சேர்க்கையானது 26.02 கோடியாக இருந்த நிலையில் இது 2019-20 ஆம் ஆண்டில் 1.6% அதிகரித்து சுமார் 26.45 கோடியைத் தாண்டியது.
இது 42 லட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்களின் அதிகரிப்பு ஆகும்.
2019-20 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020-21 ஆம் ஆண்டில் மாணாக்கர் சேர்க்கை சற்று குறைந்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021-22 ஆம் ஆண்டில், மொத்தச் சேர்க்கை 0.76% அதிகரித்துள்ளது.
2012-13 ஆம் ஆண்டின் தரவுகளின் படி, மொத்தப் பதிவு 26.3 கோடியாக இருந்தது.
2022-23 ஆம் ஆண்டில், 25.18 கோடி மாணாக்கர் சேர்க்கைப் பதிவு செய்யப்பட்டதால், மாணாக்கர் சேர்க்கை குறைந்துள்ளதோடு 2023-24 ஆம் ஆண்டில் மொத்த மாணாக்கர் சேர்க்கை 24.8 கோடியாக குறைந்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 6% (கிட்டத்தட்ட 1.22 கோடி மாணவர்கள்) குறைவாகும்.
2018-19 ஆம் ஆண்டில், 13.53 கோடி சிறுவர்கள் சேர்க்கப்பட்டனர், இது 2023-24 ஆம் ஆண்டில் 4.87% குறைந்து 12.87 கோடியாகக் குறைந்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் 12.49 கோடியாக இருந்த சிறுமிகளின் சேர்க்கையானது 2023-24 ஆம் ஆண்டில் 4.48% குறைந்து 11.93 கோடியாகக் குறைந்துள்ளது.
பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பதிவுகளில் அதிக வீழ்ச்சியானது பதிவானது.
தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்காளம், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில், பதிவு செய்யப்பட்ட மொத்த மாணாக்கர் சேர்க்கையுடன் ஒப்பிடும் போது, கல்வி வழங்கப்படும் பள்ளிகளின் சதவீதம் கணிசமான அளவுக் குறைவாக உள்ளதோடு இது உள்கட்டமைப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதைக் குறிக்கிறது.
மொத்தச் சேர்க்கையில் சிறுபான்மையினரின் பங்கு சுமார் 20 சதவீதமாக இருந்தது.
சிறுபான்மையினரில் 79.6 சதவீதம் பேர் முஸ்லீம்கள், 10 சதவீதம் கிறித்தவர்கள், 6.9 சதவீதம் சீக்கியர்கள், 2.2 சதவீதம் பௌத்தர்கள், 1.3 சதவீதம் சமணர்கள், மற்றும் 0.1 சதவீதம் பார்சிக்கள் ஆவர்.
தேசிய அளவில், UDISE+ அமைப்பில் பதிவு செய்யப்பட்ட மாணாக்கர்களில் சுமார் 26.9 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 18 சதவீதம் பேர் பட்டியலிடப்பட்டச் சாதியினர், 9.9 சதவீதம் பேர் பட்டியலிடபட்டப் பழங்குடியினர் மற்றும் 45.2 சதவீதம் பேர் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.