TNPSC Thervupettagam

UEFA சேம்பியன் போட்டி

May 30 , 2018 2243 days 701 0
  • UEFA சேம்பியன் போட்டி என்பது ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் அமைப்பால் நடத்தப்படும் வருடாந்திர கண்டத்திற்கான கிளப் கால்பந்து போட்டியாகும். இதில் ஐரோப்பாவின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கின்றன.
  • 2018 UEFA சேம்பியன் போட்டி மொத்தத்தில் 63வது போட்டியாகவும், ஐரோப்பிய கோப்பை என்ற பெயரிலிருந்து UEFA சேம்பியன் போட்டி என்று மாறிய பிறகு நடத்தப்படும் 26வது போட்டியாகவும் இருக்கின்றது.
  • ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் என்ற அணி இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஒட்டு மொத்தத்தில் 13வது முறையாக UEFA சேம்பியன் பட்டத்தையும், ஐந்து ஆண்டுகளில் நான்காவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளது.

  • 1974-76 காலகட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை UEFA சேம்பியன்ஸ் கோப்பை அல்லது ஐரோப்பிய கோப்பைகளை வென்ற பேயர்ன் முனிச் அணிக்குப் பிறகு ரியல் மாட்ரிட் அணியே தொடர்ச்சியாக வெற்றி பெற்ற முதல் அணியாகும்.
  • ரியல் மாட்ரிட், இங்கிலாந்தைச் சேர்ந்த லிவர்பூல் அணியை தோற்கடித்தது.
  • இப்போட்டி 2018ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி உக்ரைனின் கிவ் நகரில் NSC ஒலிம்பிக்ஸ்கை (Olimpiyskiy) மைதானத்தில் நடத்தப்பட்டது.
  • 2007ம் ஆண்டில் கிளாரன்ஸ் சீடோர்ப் மற்றும் 2015ம் ஆண்டில் ஆண்டிரஸ் இனிஸ்டா ஆகியோர் ஏற்படுத்திய சாதனைகளுக்குப் பிறகு சேம்பியன் கோப்பையை ஐந்து முறை வென்ற முதல் வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டொ உருவெடுத்துள்ளார்.

  • முதல் மாற்று ஆட்டக்காரராக இரண்டு கோல்கள், சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் அடித்து, ஆட்டநாயகன் விருதை பெற்ற வீரராக கேரேத் பேல் உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்