TNPSC Thervupettagam

UGC - உயர் கல்வியில் சம வாய்ப்புகள்

February 9 , 2024 162 days 152 0
  • பல்கலைக்கழக மானியக் குழுவானது (UGC), உயர்கல்வி நிறுவனங்களுக்கான வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இது உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கியப் பிரிவினருக்கு (SEDGs) சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் சில முக்கிய நடவடிக்கைகள்:
    • கற்றல் மற்றும் வருவாய் ஈட்டுவதில் பெறுதலில் நெகிழ்வுத்தன்மை
    • கல்வி வளாகத்திலேயே பகுதி நேர வேலைவாய்ப்பினை அடையாளம் காணுதல்
    • கற்கும் போதே வருவாய் ஈட்டுதல்
    • வெளிப்படையான தேர்வு நடைமுறை
    • நிதியுதவிக்கான ஒத்துழைப்பு
    • மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தில் சிறப்பு மதிப்பீடு.
  • சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கியப் பிரிவினைச் சேர்ந்த (SEDGs) மாணவர்கள், உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான உயர்கல்விக்கான அணுகலைப் பெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பிரத்தியேக சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான சிறப்புப் பிரிவுகள் அமைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்